காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டை நோக்கி பேரணி நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் கோட்டையை நோக்கி திடீர் பேரணி நடைபெற்றது.
எழும்பூர் அருகே தொடங்ய பேரணிக்கு, அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். சிந்தாதிரிப்பேட்டை வழியாக தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனால், சிந்தாதிரிப்பேட்டை, ஓமந்துாரார் மருத்துவமனை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
















