ஆன்மிகத்தில் கொங்கு மண்டலம் சிறப்பான வளர்ச்சி பெற்று வருவதாக, ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் புதூரில் உள்ள யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்திற்கு ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை புரிந்தார்.
அப்போது அவருக்கு பக்தர்கள் மலர்களை தூவி வரவேற்பளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு கிராமத்திலும் ஆன்மிகம் தழைத்து பூஜைகள், வேள்விகள், அன்னதானம் என அனைத்தும் சிறப்பாக நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.
















