நிர்மலா சீதாராமன் சாதனை - ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் - சிறப்பு தொகுப்பு!
Mar 18, 2026, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிர்மலா சீதாராமன் சாதனை – ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 1, 2026, 09:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி
தொகுப்பு.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,நாட்டின் மிக பொறுப்புள்ள நிதித்துறை அமைச்சராக 6 ஆண்டுகள், 8 மாதங்களை நிறைவு செய்துள்ளார்.

முன்னதாக கடந்த 1950ம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி பதவியேற்ற மறைந்த முன்னாள் நிதியமைச்சா் சி.டி.தேஷ்முக், 6 ஆண்டுகள் 2 மாதங்களுக்கு பதவியில் நீடித்தாா்.

1951 மற்றும் 1956க்கு இடையில் பட்ஜெட்களை தாக்கல் செய்த தேஷ்முக், ஆறு முழு பட்ஜெட்களையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார்.இதில் இரண்டு பட்ஜெட்கள் 1952-ல் முதல் மக்களவை அமைப்பதற்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தேஷ் முக் சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக 9 வது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற புதிய சாதனையை படைக்கிறார். இதை இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் பெருமைக்குரிய தருணம் என்று பிரதமா் மோடி பாராட்டியுள்ளார்.

2019ம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், 2020ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது, ​​2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசி, மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்திய சாதனையையும் படைத்தார்.

கடந்த 2024-ல் தொடா்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து, தனக்கு முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமரும் முன்னாள் நிதியமைச்சருமான மொராா்ஜி தேசாய் தொடா்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த சாதனையை முறியடித்தார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்திலும் பிறகு முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின்ஆட்சிக்காலத்திலும் நிதியமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தான் இதுவரை அதிக எண்ணிக்கையிலான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.

1959 ஆம் ஆண்டு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த மொரார்ஜி தேசாய் 1959 முதல்1964 வரை நிதியமைச்சராக இருந்த காலத்தில் மொத்தம் 6 பட்ஜெட்டுகளையும், பிறகு 1967 முதல் 1969 க்கு இடையில் 4 பட்ஜெட்டுகளையும் என மொத்தம் மொத்தம் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.

4 வெவ்வேறு காலகட்டங்களில் 8 ஆண்டுகள் நிதி அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

அடுத்ததாக முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்த காலத்தில் 8 முறை பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். இவர்கள் எல்லாம் வெவ்வேறு பிரதமர்களின் ஆட்சியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 1991 மற்றும் 1995 க்கு இடையில் பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சிகாலத்தில் நிதியமைச்சராக இருந்தபோது தொடர்ச்சியாக 5 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 9 பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

2019-ல், அடிமை இந்தியாவின் அடையாளமான ‘பட்ஜெட் பிரீஃப்கேஸை’ மாற்றி, சிவப்புத் துணியால் சுற்றப்பட்ட பாரம்பரிய இந்திய கணக்குப் பதிவேட்டை பயன்படுத்திய நிர்மலா சீதாராமன் 2021-ல், ஒரு டேப்லெட்டைப் பயன்படுத்தி முதல் காகிதமில்லா பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.

நாட்டின் முதல் பெண் நிதியமைச்சராகப் பதவியேற்ற நிா்மலா சீதாராமன், கொரொனோ பெருந்தொற்று பாதித்த காலத்திலும், உலகளாவிய புவிசார் அரசியல் தடுமாற்றங்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தி, தொடர்ந்து சிறந்த நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்து உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியாவை நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளார்.

===

 

Tags: union budget 2026india union budget 2026india budget 2026budget 2026 indiabudget 2026 stocksindian budget 2026budget 2026 sectorstax slabs budget 2026nirmala seetha raman2026 union budgetbudget 2026india budget 2026 datebudget 2026 gstbudget 2026 income taxbudget 2026 livebudget 2026 tax relief
ShareTweetSendShare
Previous Post

கணைய புற்றுநோய் பாதிப்பை முழுமையாக அழிக்க புதிய வழி – எலிகளில் பரிசோதனை நடத்தி ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

Next Post

மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பதவியேற்பு!

Related News

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More

அண்மைச் செய்திகள்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

புதுச்சேரி இண்டி கூட்டணியில் குழப்பம் – தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், முதலியார்பேட்டையில் திமுக எம்எல்ஏ மனுத்தாக்கல்!

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது – பிரதமர் மோடி

வடகொரியா நாடாளுமன்ற தேர்தல் – கிம் ஜாங் உன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

விமானப் பயணிகளுக்கு நிம்மதி – 60% இடங்களுக்கு இருக்கை தேர்வு கட்டணம் விதிக்கப்படாது என அறிவிப்பு!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் திமுக நிர்வாகிகள் – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies