மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் 16வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதாகவும், விபத்துக்கால காப்பீட்டுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 – 27ம் ஆண்டிற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் பதினாறாவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டதாகவும்,மாநிலங்களுக்கான வரி பகிர்வு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டை காட்டிலும் பொருளாதார நிதிப்பற்றாக்குறை 4.3 விழுக்காடு என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கால காப்பீடுகளுக்கான வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மும்பை ஐஐடியுடன் இணைந்து content creator ஆய்வகத்தை அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் 15 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகளிலும், 500 கல்லூரிகளிலும் ABGC content creator lab அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களின் உற்பத்தி உள்நாட்டிலேயே அதிகரிக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
















