கோவை மதுக்கரை அருகே வயிற்றில் 13 மாத கருவுடன் இருந்த பெண் யானை, வனத்துறையின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
குப்பனூரில் தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கிய பெண் காட்டு யானை கடந்த வாரம் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. தொடர்ந்து காட்டு யானையை வனத்துறையினர் முறையாக கண்காணிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் வயிற்றில் 13 மாத கருவுடன் இருந்த அந்த பெண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினர் யானையை முறையாக கண்காணித்து சிகிச்சை அளிக்காததே உயிரிழப்பிற்கு காரணமென வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
















