அமெரிக்க வரி குறைப்பால் ஏற்றுமதி உயரும் - திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்பு!
Feb 8, 2026, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க வரி குறைப்பால் ஏற்றுமதி உயரும் – திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க வரி குறைப்பால் திருப்பூர் ஏற்றுமதி பெருமளவு அதிகரிக்கும் என்றும், திருப்பூருக்கு இதுவொரு மகிழ்ச்சியான தருணம் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பின்னலாடை ஏற்றுமதி நடைபெற்று வரும் நிலையில், அதில் 40 சதவீதம் அமெரிக்காவுக்கு மட்டுமே அனுப்பப்படுகிறது.

கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்தியா மீது அமெரிக்கா விதித்த கூடுதல் வரி காரணமாக அமெரிக்காவுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்தியா – அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியில் 32 சதவீதம் குறைக்கப்பட்டு வெறும் 18 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் திருப்பூரில் பின்னலாடை தொழில் புத்துயிர் பெறும் என தொழில் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணைத்தலைவர் இளங்கோ கூறுகையில், ‘ அமெரிக்க வரி காரணமாக சிலமாதங்களாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். பல நிறுவனங்கள் ஆர்டர்களை அனுப்ப முடியாமல் தவித்தனர். தற்போது பிப்ரவரி 6ந்தேதி, அமெரிக்கா வரியினை 18 சதவீதமாக குறைத்துள்ளது திருப்பூருக்கான பெரும் வாய்ப்பாக இருக்கிறது. பின்னலாடத்தொழிலுக்கு நல்ல சூழல் உருவாகி உள்ளது.

அமெரிக்க வரி குறைப்பு, ஐரோப்பிய வரியில்லா ஒப்பந்தம் போன்ற காரணங்களால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியானது இந்த ஆண்டு 15 முதல் 20 சதவீதம் உயரும். இந்த ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 40 பில்லியன் என்ற அளவிற்கு செல்லும். இதற்கான கட்டமைப்புகளையும், மனிதவளத்தயும் மேம்படுத்தி இலக்கினை அடைய வேண்டும் என்றார்.

ஆயத்தஆடை மேம்பாட்டுக் கழக செயற்குழு உறுப்பினர் ராமு கூறுகையில், ‘இந்திய-அமெரிக்க ஒப்பந்ததித்தின் மூலம் திருப்பூருக்கு இது ஒரு வின்வின் சிச்சுவேசன். இது ஒரு வரப்பிரசாதம். 4 மாதங்கள் பட்ட கஷ்டத்துக்கு வரிகுறைக்கப்பட்டுள்ளது.

40 சதவீதம் அளவுக்கான ஏற்றுமதி அமெரிக்காவுக்கு மட்டுமே நடந்த நிலையில், அதிகப்பட்சமான வரி காரணமாக நிறைய தேக்கம் ஏற்பட்டது. தற்போது வரிகுறைக்கப்ப்ட்டு தொடர்ச்சியாக வர்த்தக ஆர்டர்கள் வந்து கொண்டு இருக்கிறது. தெளிவான ஆர்டர்களை எடுத்து செய்து திருப்பூரின் ஒரு லட்சம் கோடி இலக்கு என்ற நிலையை அடைய வேண்டும். இதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.

Tags: india us trade agreement collapsebilateral trade agreement india usஆஐசூIndustry expertsTiruppur's exportsTiruppur's exports increaseUS india trade agreementUS tariffs.India-US trade agreement.india us trade deal agreement
ShareTweetSendShare
Previous Post

அரசுத் தேர்வுகளை அலட்சியத்துடன் அணுகும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

சென்னையில் 13-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் கைது!

Related News

சென்னையில் 13-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் கைது!

அரசுத் தேர்வுகளை அலட்சியத்துடன் அணுகும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மும்பையில் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கு – பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!

NDA கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – டிடிவி தினகரன் உறுதி!

மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக நீர் திறக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் 48 இடங்களில் நமோ மாரத்தான் போட்டிகள் – நயினார் பாலாஜி

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி குறைப்பால் ஏற்றுமதி உயரும் – திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்பு!

புனரமைப்பு பணிகள் முடியாமல் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது ஆட்சிக்கு நல்லதல்ல – நயினார் நாகேந்திரன்

முதலமைச்சரை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுக்கின்றனர் – மதுரை திமுக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

சென்னையில் போக்குவரத்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு சைக்ளோத்தான் போட்டி!

பிரதமர் விருந்தில் “நாளை நமதே” பாடல் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

சேலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

நிர்வாக குளறுபடி காரணமாக குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் ஒத்திவைப்பு – தேர்வர்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் கனவை பறித்த திமுக பிராந்திய அரசு – அண்ணாமலை கண்டனம்!

கூடுதல் தொகுதி கேட்டு நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் – மௌனம் காக்கும் திமுக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies