இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டது.
அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை பிசிசிஐ நீக்கியுள்ளது.
பிசிசிஐ வெளியிட்ட பட்டியலில் ஏ பிரிவில் சுப்மன் கில், பும்ரா, ஜடேஜா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுவதால் விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் பி கிரேடுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பன்ட், குல்தீப், ஜெய்ஸ்வால், சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் பி பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.
சி பிரிவில் அக்ஸர் பட்டேல், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம்துபே, சஞ்சுசாம்சன், அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றுள்ளனர்.பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் சி பிரிவில் உள்ளனர்.
மகளிர் அணிக்கான ஏ பிரிவில் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்தி ஷர்மா இடம்பெற்றுள்ளனர். பி பிரிவில் ரேணுகா தாகூர், ஷஃபாலி வர்மா, ரிஷா கோஷ், ஸ்நேஹ் ராணா இடம்பெற்றுள்ளனர்.
















