ஜெப்ரீ எப்ஸ்டீன் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என கூறி மருத்துவர் மைக்கேல் பேடன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
உலகையே அதிர வைத்த பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் கடந்த 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறை அறையில் இறந்து கிடந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், உடற்கூராய்வின் அடிப்படையில் ஜெப்ரீ எப்ஸ்டீன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தீர்ப்பளித்தது.
சமீபத்தில் ஜெப்ரீ எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பதால் புதிய விசாரணை நடத்த வேண்டும் என அவரது உடற்கூராய்வின் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன் கூறியுள்ளார்.
















