இனி எந்த ஜென்மத்திற்கும் திமுகவினர் கோவை மண்ணில் கால் பதிக்க முடியாது - நயினார் நாகேந்திரன்
Apr 6, 2026, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி எந்த ஜென்மத்திற்கும் திமுகவினர் கோவை மண்ணில் கால் பதிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இனி எந்த ஜென்மத்திற்கும் திமுகவினர் கோவை மண்ணில் கால்பதிக்க முடியாது  என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், நேற்று கரூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், கோவை மக்கள் தங்கள் ஊரைத் தவிர மற்ற எல்லா ஊர்களையும் கெடுப்பார்கள் எனக் கொங்கு மக்களின் மீது தனக்குள்ள மொத்த வன்மத்தையும் கொட்டியுள்ளார் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் என தெரிவித்துளளார்.

அதைக் கொஞ்சம் கூட கூசாமல் ரசித்து மகிழ்கிறார் கொங்கு மண்டலத்தைச் சார்ந்த செந்தில் பாலாஜி என்றும்,  அதுசரி ஊரை அடித்து உலையில் போடும் கோபாலபுரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கண்களுக்கு, மற்றவர்களும் ஊரைக் கெடுப்பவர்கள் போலத் தானே தெரியும்? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் காலங்காலமாக திமுகவால் முழுமையாகக் கைப்பற்ற முடியாத சிம்மசொப்பனமாகத் திகழும் கோவை மாவட்டத்தின் மீது, உடன்பிறப்புகளுக்கு அளவுகடந்த ஆத்திரம் இருப்பது இயல்பானது தானே? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவறான திட்ட அறிக்கை மூலம் கோவை மாவட்டத்திற்கான மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவாலய அரசு முடக்கி வைத்ததற்கான காரணம் இப்போது தெரிகிறதா? தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையை, ஊரைக் கெடுப்பவர்களின் ஊர் என்று பொதுவெளியில் அவதூறாகப் பேசுமளவிற்கு ஆணவம் தலைக்கேறிய திமுகவினர், இனி எந்த ஜென்மத்திற்கும் கோவை மண்ணில் கால்பதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தயாநிதிதமது பிளவுவாத பேச்சிற்கு உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நயினார் வலியுத்தியுள்ளார்.

Tags: bjp nainar nagendrannainar nagendran issuemla nainar nagendrandayanithi maran speechNainar NagendranBJP MLA Nainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjp
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் போராட்டத்தின்போது சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவி மீது தாக்குதல்!

Next Post

போட்டி போட்டு விருப்ப மனுக்களை பெற்று சென்ற தவெகவினர் – பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல்!

Related News

ஊடுருவல்காரர்களை வெளியேற்ற பாஜக-வுக்கு வாக்களியுங்கள் – பிரதமர் மோடி!

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது- மத்திய அமைச்சர் எல்.முருகன்!

நெருக்கடி நிலையிலும் பெட்ரோல் வினியோகம் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது – பிரதமர் மோடி உறுதி!

இனியும் மொழியை வைத்து திமுக அரசியல் செய்ய முடியாது – தமிழிசை உறுதி!

அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என நாடகம் ஆடுவதா? – தர்மேந்திர பிரதான் கேள்வி!

மக்களுடன் தரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்!

அதிமுக அழுத்தம் காரணமாக மகளிர் உரிமைத்தொகையை திமுக கொடுத்தது – இபிஎஸ்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மீனவர்களை மீட்டதைக்கூட கொச்சைப்படுத்தி அரசியலாக்குகின்றனர் – நயினார் நாகேந்திரன்

ஈரானில் சிக்கி தவித்த 327 மீனவர்கள் சென்னை வந்தனர் – பாஜக தலைவர்கள் வரவேற்பு!

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies