விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை பிரிட்டன் நீதிமன்றம் முடக்கியதால் அவர் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மும்பை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி புகாரில், தொழிலதிபா் விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா்.
இதனால் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
இதை எதிர்த்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற லண்டன் மற்றும் வேல்ஸ் நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், அவரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்கள் முடக்கப்பட்டதாக கூறினார்.
இதனால் அவரால் இந்தியாவுக்கு எப்போது வரமுடியும் என்பது உறுதியாக கூற இயலாது என தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், வழக்கை விசாரணையை ஒத்திவைத்தனர்.
















