2016ம் ஆண்டிலேயே திமுகவுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் விரும்பியதாகவும், தற்போது அது நிறைவேறியுள்ளதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக நிர்வாகிகளின் விருப்பத்தின் பேரிலேயே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறினார்.
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், மாநிலங்களவை இடம் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
















