டெல்லியில் நடைபெற்று வரும் AI மாநாட்டில், உலகத் தலைவர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் இணைந்து மாநாட்டின் சிறப்பம்சங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இந்தியாவை உலகளாவிய ஏஐ மையமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, டெல்லியில் AI மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதேபோல், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன், மெட்டா ஏஐ அதிகாரி அலெக்சாண்டர் வாங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் இணைந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த அதிநவீன ஏஐ தொழில்நுட்பக் கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
















