மத்தியப்பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் காமினி சிறுத்தை மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
ப்ராஜெக்ட் சீட்டா திட்டத்தின்கீழ், கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன.
இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தை இனத்தை மீண்டும் நிலைநிறுத்த இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட காமினி சிறுத்தை, மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது.
















