சேலம் ஆத்தூரில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. ஆத்தூர் கடைவீதி பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்வதற்கான பிரதான சாலை உள்ளது.
மேலும் அந்த பகுதியில் தனியார் பள்ளிகள் உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்த நிலையில், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
















