வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாபெரும் மாணவர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பனியாகஞ்ச் காவல்நிலையத்திற்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த காவல் ஆய்வாளர் சந்தோஷ் சவுத்ரி என்பவரை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டனர்.
இந்த படுகொலைக்கு பொறுப்பேற்ற அகமது ரஸா ஹாசன் மோதி என்ற குற்றவாளி டெல்லியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் விசாரணையை துரித படுத்திய அதிகாரிகள் அந்த நபரை டெல்லியில் இருந்து பின்லாந்து நாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டுருந்ததை கண்டறிந்தனர்.
அதுபோலவே டெல்லி விமான நிலையத்திற்கு சென்ற அவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து வங்கதேசத்திற்கு நாடு கடத்தினர்.
















