உத்தரப்பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் மாணிக் குப்தா என்ற நடுவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா, கிரிக்கெட் நடுவராக சுமார் 30 ஆண்டு கால அனுபவம் கொண்டவர்.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டி ஒன்றில் நடுவராக மாணிக் குப்தா சென்றிருந்தார்.
போட்டி நிறைவடைந்ததும் மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்து தேனீர் அருந்தியபோது தேனீக்கள் கொட்டியதில் மாணிக் குப்தா பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
















