அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.
உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிக வர்த்தக வரிகளை விதித்து வந்தார்.
இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் என்றும், 9 நீதிபதிகளில் 6 பேர் தீர்ப்பளித்தனர்.
உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிமன்ற, அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.
















