குஜராத்தில் அரசு நடத்தும் நடமாடும் பள்ளிகள், உப்பு சதுப்பு நிலப்பகுதியான ரான் ஆஃப் கட்சில் உள்ள அகாரியா உப்பளத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி தாகத்தை பூர்த்தி செய்து வருகின்றன.
ஒருபுறம் தார் பாலைவனமும் மறுபுறம் அரபிக்கடலும் சூழ்ந்துள்ள ரான் ஆஃப் கட்ச் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் அதாவது அக்டோபர் முதல் ஜூன் வரை 8 மாதங்கள், அகாரியா மக்கள், தங்கள் குடும்பங்களுடன் இடம்பெயருகின்றனர்… சாலை, மின்சாரம், குடிநீர் என எந்த வசதிகளும் இல்லாமல், தற்காலிக குடிசைகளில் வாழ்கின்றனர். இடப்பெயர்வால் அவர்களது குழந்தைகளின் கல்வி தடைபடுவதை தவிர்க்கும் விதமாக குஜராத் மாநில அரசு நடமாடும் பள்ளிகளை அறிமுகப்படுத்தியது. சோலார் பேருந்தில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள் குழந்தைகளின் கல்வி தாகத்தை தீர்த்து வருகின்றன.
இதன் மூலம் அகாரியா உப்பள தொழிலாளர்கள் குடும்பங்களை அரசின் கல்விச் சேவை நேரடியாக செல்வதால் குழந்தைகளின் கல்வித்தரம் மேம்பட்டுள்ளது
















