ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெறும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆற்காடு அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் செயல்படும் மதுபானக் கடையில், காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை,மதுபானங்கள் விற்கப்படுகின்றன.
இங்கு உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என்ற விதியை காற்றில் பறக்க விட்டு, மதுபானங்களை ரூபாய் 50 முதல் 100 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதனை கண்டுகொள்ள வேண்டிய அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காததால், மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
இதனால் அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள் பகலிலேயே மது அருந்துவதால், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
















