ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ரஜினி மற்றும் கமலின் பிறந்த தேதிகளைக் குறிக்கும் வகையில் இன்று காலை 12:07 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
















