சைபர் குற்றங்கள் தனிநபரின் நிம்மதி, கவுரவம் மற்றும் மன நலனை நேரடியாக பாதிப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூரியகாந்த், சைபர் குற்றவாளிகளுக்கு இலக்காக உள்ளவர்கள் எளிய மனிதர்கள் என்றும், தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ள முதியவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்துத் தாக்குவது வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் உலகில் எல்லைகள் இல்லாததால் குற்றவாளிகளைக் கண்டறிவது புலனாய்வுத் துறையினருக்குப் பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்த சூரியகாந்த், சட்டங்களை விடவும், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விழிப்புணர்வே மிக முக்கியம் என்று தெரிவித்தார்.
சைபர் வழக்குகளைக் கையாள நீதிபதிகளுக்கும், காவல்துறைக்கும் அதிநவீன தொழில்நுட்பப் பயிற்சி அவசியம் என்று தெரிவித்த தலைமை நீதிபதி,
காலதாமதத்தை தவிர்க்க சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
















