சீர்காழி அருகே அரசுப் பேருந்தில் சக்கரங்கள் கழன்றதால், பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி அரசுப் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
சீர்காழியை அடுத்த சேந்தங்குடியை தாண்டியபோது பேருந்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் சக்கரங்கள் கழன்றன.
அதிர்ச்சியில் பயணிகள் கூச்சலிட்ட நிலையில், ஓட்டுநர் பேருந்தை லாவகமாக நிறுத்தியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திமுக அரசின் அலட்சியத்தால் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதே இல்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.
















