முடி மாற்று அறுவை சிகிச்சை வழங்கும் நிறுவனங்கள், இனி தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, தமிழ்நாடு மருத்துவ நிறுவன விதிகளின் கீழ் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முடி மாற்று அறுவை சிகிச்சை, பதிவு செய்யப்பட்ட தகுதியான மருத்துவ நிபுணரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை, தகுதி வாய்ந்த தோல் மருத்துவர் அல்லது பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மையங்களில் அவசர நிலைகளை கையாளத் தேவையான உபகரணங்கள் மற்றும் வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு முன், மருத்துவ நிபுணர் மற்றும் மயக்க மருந்து நிபுணரின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும்,
அழகியல் மற்றும் அறுவை நடைமுறைகள் குறித்த குறைந்தபட்ச வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















