வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் மலைப்பாதையில் தேங்கிய பனியால், சுமார் 350 வாகனங்கள் சிக்கிக் கொண்டன. சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அங்குள்ள பிரபல சுற்றுலாத் தளமான சிப்சு மலைச்சாலையில் பனி படர்ந்துள்ளது.
இதனால் அவ்வழியாக வந்த சுமார் 350 வாகனங்கள் நகர முடியாமல் பனியில் சிக்கிக் கொண்டன.
இது குறித்து தகவலறிந்த ராணுவத்தினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 46 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
















