சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதால், சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா கிராமத்திற்கு முதல்முறையாக மின்சார வசதி கிடைத்துள்ளது.
கோகுண்டா கிராமம் பல ஆண்டுகளாக மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால் சாலை, மின்சாரம், மருத்துவம் போன்ற எந்த அடிப்படை வசதியும் கிராம மக்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது நக்சல்கள் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், இருளில் மூழ்கிக் கிடந்த கோகுண்டா கிராமத்திற்கு விடிவு காலம் பிறந்துள்ளது.
பாதுகாப்பு படையினரின் முயற்சியின் கீழ் வளர்ச்சிப் பணிகள் சாத்தியமாகியுள்ளது. அடர்ந்த காடுகள், சவாலான நிலப்பரப்புகளுக்கு இடையே பாதுகாப்பு படையினர் உதவியுடன் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள கிராம மக்கள், மின்வசதி மூலம் கிராமத்தில் கல்வி, மருத்துவம், தொலைதொடர்பு வசதிகள் மேம்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறியுள்ளனர்.
















