தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, இறந்த அண்ணனின் சொத்தை எழுதித்தர கோரி அண்ணியை கொழுந்தனார்,
விறகு கட்டையால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரியூர் அருகே சிடோம்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், இறப்பதற்கு முன்பு தனது சொத்துக்களை தனது மனைவி மகேஸ்வரியின் பெயரில் பதிவு செய்திருந்தார்.
தற்போது அந்த சொத்துக்களை தனக்கு எழுதித்தரக் கோரி மூர்த்தியின் சகோதரர் செல்வம், வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்த மகேஸ்வரியை விறகு கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து மகேஸ்வரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
















