திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டுவதை உடனடியாக நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
பூமாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாட்டாமை ராயப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள், நகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும், தேவாலயம் கட்டி பாதையை அடைக்கப்போவதாக கூறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் திமுக கவுன்சிலர் உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
















