திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலில், கந்த சஷ்டி கவசம் பாடல் பாட அனுமதி மறுக்கப்பட்டதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
செங்கம் நகரப்பகுதியில் அமைந்துள்ள அனுப்பாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் சிவன் ஆலயத்தில் அமைந்துள்ள முருகன் சன்னதி முன்பு பக்தர்கள் கந்த சஷ்ட கவசம் பாடலை பாட முயன்றனர்.
இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அரோகரா என்ற முழக்கத்தோடு பக்தர்கள் முருகனை கைகூப்பி வேண்டி வணங்கி அங்கிருந்து மனவேதனையுடன் வெளியேறினர்.
வழக்கத்திற்கு மாறாக செங்கம் சிவன் ஆலயத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் தீபம் ஏற்றி கந்த சஷ்டி பாட அனுமதி மறுக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
















