திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடந்த கட்டட கழிவுகள் தமிழ் ஜனம் செய்தியின் எதிரொலியாக அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் அருகே உள்ள ஸ்ரீனிவாசபுரம் பகுதியில், கடந்த பல மாதங்களாகவே கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தன.
இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 21-ம் தேதி கட்டட கழிவுகள் குவிந்து கிடப்பது குறித்து, நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நகராட்சி நிர்வாகம் சார்பில், ஶ்ரீனிவாசபுரம் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கட்டடக்கழிவுகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
















