மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் சிறையிலிருந்து வெளியே வரும் போது ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட இளைஞர்களின் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
இந்தூரை சேர்ந்த காகா மற்றும் பில்லு ஆகிய இருவர் வழக்கு ஒன்றில் தண்டனைக் காலத்தை முடித்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது சிறையில் இருந்து வெளியே வருவதை ரீல்ஸாக படம் பிடித்த அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், போலீசார் அஜாக்கிரதையாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
சம்பவ இடத்தில் காவலர் இல்லாததை அறிந்து கொண்டு இளைஞர்கள் ரீல்ஸ் எடுத்ததாக போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறைக்கு வெளியே ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
















