இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் செல்கிறார்.
இஸ்ரேலுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் செல்கிறார்.
பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் காசா நிலவரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் முதல் இந்திய பிரதமராக இஸ்ரேல் நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பிரமோஸை விட பன்மடங்கு வேகத்தில் இயங்கும் கோல்டன் ஹாரிசான் ஏவுகணையை இந்தியாவுக்கு வழங்க இஸ்ரேல் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
















