உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், சுமார் 13 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய்-யை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அயோத்தியில் ரமலான், ஹோலி பண்டிகையை முன்னிட்டு எண்ணெய் விற்பனை கடைகளில், கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது தரமற்றவை என தெரியவந்தது.
இதையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்ட சுமார் 13 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
















