திண்டுக்கல் மாவட்டம் பழநியில், புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
பழநி மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சித்தர் ஜீவசமாதியில், உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. ஜப்பானிய தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த யாகத்தில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அவர்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.
















