திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வழிபாடு செய்தனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான இந்த ஆலயத்தில் மாசி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாலகும்ப குருமணி ஆதீனம் தலைமையிலான ஜப்பான் நாட்டு பக்தர்கள் தீச்சட்டி எடுத்து கோயிலின் உட்பிரகாரத்தை சுற்றி வந்து மாரியம்மனை வழிபட்டனர்.
















