பண முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தொழிலதிபர் அனில் அம்பானி ஆஜரானார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மும்பையில் பாலி ஹில் பகுதியில் இருக்கும், 3,716 கோடி ரூபாய் மதிப்பிலான அனில் அம்பானியின் பிரமாண்ட பங்களா முடக்கப்பட்டது.
அனில் அம்பானிக்கு எதிரான வழக்கில் இதுவரை 15 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜரானார்
















