திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு கவனம் பெற்ற மரியா திரைப்படம் யூடியூபில் வெளியாகியுள்ளது.
சுயாதீன திரைப்படமாக எடுக்கப்பட்டு பல்வேறு திரை விழாக்களில் கலந்துகொண்டு பேசப்பட்ட திரைப்படம் மரியா. அறிமுக இயக்குநர் ஹரி கே.சுதன், கிறிஸ்துவம் சுதந்திரத்தைப் பறிக்கிறதா என்கிற கோணத்தில் கதையை எழுதியிருந்தார்.
கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தொடர்ந்து ஷார்ட்பிளிக்ஸ் (short flix) ஓடிடியில் வெளியானது.
இந்த நிலையில், தற்போது மரியா படத்தை யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
















