தூத்துக்குடியில் தேர்தலை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜகவினருக்கு மாநகராட்சி மேயர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் பாஜகவினர் தூத்துக்குடியில் தெருமுனை பிரச்சாரங்கள் மேற்கொண்டு திமுக ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டுன்றனர்.
இந்நிலையில் திமுக சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்றுப் பேசிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், பாஜகவினர் தெருமுனை கூட்டத்தை நடத்த விடக் கூடாது என்றும் அவர்கள் தெருமுனை கூட்டம் நடத்த முற்பட்டால் பொதுமக்கள் தடுத்து விரட்டி விட வேண்டும் எனவும் மிரட்டும் தொனியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















