தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
எரியூர் காவல்நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றிய சகாதேவன், கடந்த 2 ஆண்டுகள் முன்பு, சிறுமியை பாலியல் வன்கொடுமை புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் தருமபுரி ரயில்நிலையம் அருகே தேக்கு தோப்பில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















