கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
மும்பை வந்திறங்கிய அவர், முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்கள், நிதித்துறை நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இரண்டு நாட்களை மும்பையில் செலவிடும் அவர், மார்ச் ஒன்றாம் தேதி டெல்லிக்கு சென்று, இரண்டாம் தேதி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















