பிரெஞ்ச் லீக் ஒன், கால்பந்து போட்டியில், ரமலான் நோன்பு இருக்கும் தனது சக வீரர்கள் நோன்பு துறக்க ஏதுவாக, கோல்கீப்பர் காயம் ஏற்பட்டது போல நடித்து ஆட்டத்தை நிறுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.
இங்கிலாந்தின் பிரீமியர் லீக் மற்றும் ஜெர்மனியின் பன்டெஸ்லிகா போன்ற கால்பந்து தொடர்களில், ரமலான் காலத்தில் நோன்பு துறக்க ஆட்டத்தின் நடுவே சிறிய இடைவேளை வழங்கப்படுகிறது.
ஆனால், ஃப்ரெஞ்ச் லீக் ஒன் தொடரில் இத்தகைய இடைவேளைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், பிரெஞ்ச் லீக் ஒன், கால்பந்து போட்டியில் நாந்தேஸ் மற்றும் லி ஹாவ்ரே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில், நாந்தேஸ் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.அப்போது,நோன்ட்ஸ் அணி கோல்கீப்பர் அந்தோணி லோப்ஸ், ரமலான் நோன்பு இருக்கும் தனது சக வீரர்கள், நோன்பு துறக்க தனக்கு காயம் ஏற்பட்டது போல நடித்து ஆட்டத்தை நிறுத்தினார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த இடைவெளியைப் பயன்படுத்தி, நோன்பு இருந்த சக வீரர்கள் மைதானத்தின் ஓரம் சென்று பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீர் அருந்தி தங்களது இப்தார் நோன்பை முடித்தனர்.
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
















