சேலம் அருகே சமுதாயக்கூடம் கட்டுவது தொடர்பான பிரச்னையில் ஜேசிபி வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகராதிபட்டினம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், சமுதாயக்கூடம் கட்ட அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்கு அருகிலுள்ள ஒரு தனி குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், பொதுமக்கள் சமுதாயக்கூடம் கட்டும் பணியைத் தொடங்கியபோது, எதிர் தரப்பினர் அங்கு வந்து கட்டப்பட்ட சுவர்களை இடித்து தள்ளியுள்ளனர்.
தகவலறிந்து சென்ற அதிகாரிகள் கட்டுமானத்தை இடிப்பதற்காக ஜேசிபி வாகனத்தை கொண்டு சென்றுள்ளனர். இதனால் கோபமடைந்த மக்கள் ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















