தேனி மாவட்டம் பெரியகுளத்தில், பட்டியலின இளைஞர் கொலை வழக்கில், பெண் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எண்டப்புளி கிராமத்தில் கடந்த 2020ம் ஆண்டில் தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து சமரசம் பேச வந்த பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த முருகன் என்பவரை, அதே ஊரைச் சேர்ந்த அங்கம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த வழக்கை விசாரித்த எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா 6 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்தது.
















