வானில் இன்று தென்படும் 6 கோள்களை, பொதுமக்கள் காணும் வகையில் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் உள்ள வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் இன்று மாலை ஒரே நேர்க்கோட்டில் வர உள்ளன.
இதனை பொதுமக்கள் பார்க்கும் வகையில், கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் தொலைநோக்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோள்களை வெறும் கண்களால் பார்க்கலாம் எனவும் யுரேனஸ் மற்றும் நெப்டியூனானது பூமியில் இருந்து தொலைவில் இருப்பதால் அதனை வெறும் கண்களால் காண முடியாது எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
















