மாலத்தீவுகளுடன் தூதரக உறவுகளை துண்டிப்பதாக மொரீஷியஸ் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டம், மொரீஷியஸ் நாட்டுக்கு சொந்தமானது. மொரீஷியஸ் சுதந்திரம் பெற்ற நிலையிலும், சாகோஸ் தீவுக்கூட்டம் பிரிட்டீஷ் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து இருக்கிறது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், சாகோஸ் தீவை மீண்டும் மொரீஷியஷிடம் ஒப்படைக்கும் படி தீர்ப்பளித்தது.
சர்வதேச நீதிமன்ற தீர்ப்புக்கு சாகோஸ் தீவில் ராணுவ தளத்தை கொண்டுள்ள அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அமெரிக்காவின் எதிர்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்த மாலத்தீவுகள், சாகோஸ் தீவை தங்களிடம் ஒப்படைத்தால் அங்கு அமெரிக்க ராணுவ தளம் தொடர்ந்து செயல்பட ஒத்துழைப்போம் என கூறியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மொரீஷியல் மாலத்தீவுகளுடனான தூதரக உறவுகளை துண்டித்துள்ளது.
















