திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில், கள்ளச்சந்தையில் திமுகவினர் மதுபானம் விற்பனை செய்ததை பா.ஜ.க.வினர் தடுக்க முயன்றதால் தகராறு ஏற்பட்டது.
கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் திமுகவினர் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டனர். கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என பா.ஜ.க.வினர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















