தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டjதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.
விழாவில் பேசிய மோடி, இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்றேன். தமிழகம் மற்றும் இந்திய மக்களின் நலன்களுக்கு பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த பூரண சந்திரன் குடும்ப்த்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாகவும், அவர்களின் துக்கத்தை உணர முடிந்ததாகவும் அவர் கூறினார்.
இது திமுக அரசின் நியாயமற்ற தன்மையால் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
திமுக என்ன வேண்டுமானால் செய்யட்டும், இறுதியில் முருகன் அருளாள் வாய்மையே வெல்லும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மக்களின் நலனுக்காக திமுக அரசு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என குற்றம்சாட்டினார். திமுக அரசு ஏழைகளுக்கு நல்லது செய்யாது, நல்லது செய்யவும் விடாது
சிலர் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கின்றனர் என்றும், ஆனால் இந்த கூட்டத்தை பார்க்கும் போது அவர்களில் கனவு கற்பனையாக மாறும் என தெரிவித்தார்.
தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டனர் என்றும், என்டிஏ கூட்டணியால் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் என்டிஏ கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
















