ஈரான் போர் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசியா முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி, சார்ஜா, துபாய், தோகா, குவைத், பக்ரைன், கல்ஃப், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 3வது நாளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
















