ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உரிய அனுமதியின்றி தங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை சிப்காட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வரும் நிலையில், வேப்பம்பாளையம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ராகுல் என்பவரின் வீட்டில் நைஜீரியாவைச் சேர்ந்த இளம்பெண் உட்பட 3 பேர் உரிய அனுமதியின்றி கடந்த 2 ஆண்டுகளாக தங்கியிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறப்பு முகாமில் அடைத்தனர்
















