இன்று நண்பகல் தோன்றும் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்சர்வேட்டரி இயற்பியல் ஆய்வகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று நண்பகல் சந்திரகிரகணம் தோன்றுகிறது என்றும், சந்திரகிரகணம் மாலை 6.30 மணி முதல் 6.47 வரை தெளிவாக தென்படும் என தெரிவித்தார்.
“சந்திரன் அடர் சிவப்பு நிறமின்றி சாம்பல் அல்லது தங்க நிறத்தில் தோன்றும் என்றும், வானம் தெளிவாக இருந்தால் தொலைநோக்கி மூலமாகவும் காணலாம் என்றும் அவர் கூறினார்.
வெறும் கண்களில் கூட பார்க்கலாம், எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அடுத்த சந்திரகிரகணம் 2028 டிசம்பர் மாதத்தில் தோன்றும் என்றும் அவர் கூறினார்.
















