சூப்பர் 8 சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது.
அந்த அணி அரையிறு சுற்றுக்கு முன்னேறாதது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தம் மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுக்கு இந்திய மதிப்பில் 16 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
















